ஜனவரி 2ம் தேதி முதல் சென்னை மின்சார ரயில்களின் அட்டவணை மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: ஜனவரி 1, 2025 புதிய ரயில் அட்டவணை அமலுக்கு வருகிறது. இந்திய ரயில்வே அறிமுகம் செய்துள்ள புதிய ரயில் அட்டவணையில் ரயில் வழித்தட வரைபடம், ரயில் நிலையம் மற்றும் ரயில்களின் எண்கள், ரயில்களின் பெயர், பயண நேரம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. மேலும் ரயில் டிக்கெட் முன்பதிவு தொடர்பாக விவரங்கள், தட்கல், டிக்கெட் கட்டணம் திரும்ப பெறும் முறைகள், ரயில் பயண சலுகைகள், சிறப்பு பயண திட்டங்கள் ஆகியவையும் இருக்கின்றன. இந்நிலையில் சென்னையில் அனைத்து மின்சார ரயில்களின் அட்டவணை ஜனவரி 2ம் தேதி முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடற்கரை – செங்கல்பட்டு, கும்மிடிப்பூண்டி உள்பட அனைத்து வழித்தட மின்சார ரயில்களின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “01.01.2025 முதல் அமுலுக்கு வரும் வகையில் மெயில்/எக்ஸ்பிரஸ் ரயில் நேர மாற்றங்களைக் கருத்தில் கொண்டு பயணிகளின் தேவை மற்றும் செயல்பாட்டுக் காரணங்களைக் கருத்தில் கொண்டு, அனைத்துப் பிரிவுகளுக்கும் புறநகர் ரயில் நேரங்கள் திருத்தப்பட்டுள்ளன. திருத்தப்பட்ட புறநகர் கால அட்டவணை 02 ஜனவரி 2025, (வியாழன்) முதல் நடைமுறைக்கு வரும் மற்றும் வார நாள் ரயில் சேவைகளுக்கு மட்டுமே இது பொருந்தும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 2-ம் தேதி முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ள ரயில்களின் அட்டவணை முழு விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

The post ஜனவரி 2ம் தேதி முதல் சென்னை மின்சார ரயில்களின் அட்டவணை மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: