தலைமை ஆசிரியர் அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டும், மாணவர்களின் வருகை பதிவேடு, மாற்றுச்சான்றிதழ் பதிவேடு புத்தகம் மற்றும் மாணவர்கள் விவரங்கள் அடங்கிய ஆவணங்கள் கிழிக்கப்பட்டிருந்தது. கம்ப்பூட்டர் மற்றும் வேதியியல் பிரிவு ஆய்வகத்தை சேதப்படுத்தப்பட்டிருந்தது. மாணவர்கள் பயன்டுபடுத்தும் பொருட்களும் சூறையாடப்பட்டிருந்தது. இதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்தனர். உடனே பள்ளி தலைமை ஆசிரியருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் விரைந்து வந்து பார்வையிட்டார்.
பின்னர் சம்பவம் குறித்து கல்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமை ஆசிரியர் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, பள்ளியை சூறையாடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இதுபோன்ற சம்பவம் இப்பள்ளியில் பலமுறை நடந்த நிலையில் புகார் கொடுத்தும் போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளதாக பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டுகின்றனர்.
The post கல்பாக்கம் அரசு பள்ளியில் கேமரா வருகை பதிவேடு, ஆய்வகம் சூறை appeared first on Dinakaran.