அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம்: பேஸ்புக்கில் பதிவு செய்த போலீஸ்காரர் சஸ்பெண்ட்

வேலூர்: சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக பேஸ்புக் பக்கத்தில் கருத்து பதிவு செய்த போலீஸ்காரர் அன்பரசனை சஸ்பெண்ட் செய்து எஸ்பி மதிவாணன் உத்தரவிட்டுள்ளார். வேலூர் தாலுகா காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணியாற்றி வருபவர் அன்பரசன். இவர் தனது பேஸ்புக் பக்கத்தில் சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் விவகாரம் தொடர்பாக அரசுக்கு எதிராக வெளியான பதிவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தனது கருத்தை பதிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில் மாவட்ட காவல் அதிகாரிகள் நேற்று விசாரணை மேற்கொண்டனர். இதன் தொடர்ச்சியாக அன்பரசனை சஸ்பெண்ட் செய்து மாவட்ட எஸ்பி மதிவாணன் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘பேஸ்புக் பக்கத்தில் அரசுக்கு எதிராக காவலர் அன்பரசன் கருத்து பதிவு செய்துள்ளார். இது சீருடை பணி விதிகளுக்கு எதிரானது என்ற புகாரின்பேரில் விசாரணை நடத்தி உறுதி செய்யப்பட்டது. மேலும் முகநூல் பக்கத்திலிருந்த அவரது கருத்து நீக்கப்பட்டதுடன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்’’ என்றனர்.

The post அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம்: பேஸ்புக்கில் பதிவு செய்த போலீஸ்காரர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Related Stories: