இரட்டை இலை விவகாரம்: தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமி பதில் மனு

சென்னை: இரட்டை இலை விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் ராம்குமார் ஆதித்தன் அளித்த புகாருக்கு எடப்பாடி பழனிசாமி பதில் மனு அளித்துள்ளார். அவர் அளித்த பதில் மனுவில்; உட்கட்சி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் ஓரளவுதான் தலையிட முடியும். அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக ராம்குமார் ஆதித்தன் கூறியுள்ள புகாரில் தேர்தல் ஆணையம் தலையிட்டு நடவடிக்கை எடுத்த முகாந்திரம் இல்லை. 2022-ல் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றபட்ட தீர்மானங்களை நீதிமன்றங்கள் அங்கீகரித்துள்ளன. கட்சியின் அடிப்படை உறுப்பினராக கூட இல்லாத ராம்குமார் அளித்த மனுவை நிராகரிக்க வேண்டும் என அதில் தெரிவித்து இருந்தார்.

The post இரட்டை இலை விவகாரம்: தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமி பதில் மனு appeared first on Dinakaran.

Related Stories: