இங்கிலாந்தில் மாயமான இந்திய மாணவியின் உடல் ஆற்றில் இருந்து மீட்பு

லண்டன்: கேரள மாநிலத்தை சேர்ந்த மாணவி சான்ட்ரா சாஜூ(22). இவர் எடின்பர்க்கில் உள்ள ஹெரியட்-வாட் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 27ம் தேதி காலை 11.55மணியளவில் நியூபிரிட்ஜ் அருகே உள்ள ஆற்றில் இருந்து இளம்பெண்ணின் சடலத்தை போலீசார் மீட்டனர். முதல் கட்ட விசாரணையில் மீட்கப்பட்டது மாணவி சான்ட்ரா சாஜூவின் சடலம் என கூறப்படுகின்றது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘‘மரணத்தில் சந்தேகம் இருப்பதாக நம்பவில்லை” என்று தெரிவித்துள்ளனர்.

The post இங்கிலாந்தில் மாயமான இந்திய மாணவியின் உடல் ஆற்றில் இருந்து மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: