சியோல்: தென் கொரியாவின் முவான் விமான நிலையத்தில் நேற்று முன்தினம் பயணிகள் விமானம் ஓடுபாதையிலிருந்து விலகி தடுப்பு சுவரில் மோதி வெடித்து சிதறியதில் 179 பயணிகள் உயிரிழந்தனர். பறவை மோதியதில் ஏற்பட்ட கோளாறால் லேண்டிங் கியர் செயல்படாமல் விமானம் விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என கூறப்படுகிறது. இதற்கிடையே, தற்காலிக அதிபர் சோய் சாங் மோக் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், நாட்டில் உள்ள அனைத்து போயிங் 737-800 விமானங்களையும் ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வகை விமானம் தான் முவானில் விபத்துக்குள்ளாகி உள்ளது. இந்த விபத்திற்கு முன்பாக மற்றொரு போயிங் 737-800 விமானத்திலும் லேண்டிங் கியர் கோளாறு இருந்தது விமானியால் கண்டறியப்பட்டதால் அந்த விமானம் புறப்பட்ட இடத்திற்கே திருப்பிவிடப்பட்டது. எனவே நாட்டில் உள்ள 101 போயிங் 737-800 விமானங்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது. இதில் அமெரிக்காவின் போயிங் நிறுவன நிபுணர்களும் பங்கேற்க தென் கொரியா விரைந்துள்ளனர்.
The post அனைத்து போயிங் விமானங்கள் ஆய்வு: தென் கொரியா முடிவு appeared first on Dinakaran.