×

மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கோயில் பூசாரிகளுக்கு ரூ.18,000 உதவித்தொகை: கெஜ்ரிவால் அறிவிப்பு

புதுடெல்லி: டெல்லியில் வரும் பிப்ரவரி மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்து கோயில் பூசாரிகள், மற்றும் குருத்வாராவில் உள்ள கிரந்திகளுக்கு மாதம் ரூ.18000 வழங்கப்படும் என்று கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,’ பூசாரிகள் மற்றும் கிரந்திகள் நமது சமூகத்திற்கு மிகவும் முக்கியமானவர்கள். ஆனால்,அவர்கள் புறகணிக்கப்பட்ட ஒரு பிரிவாக உள்ளனர். நாட்டில் முதல்முறையாக அவர்களுக்கு ஆதரவாக புதிய திட்டத்தை அறிமுகப்படுத்துகிறோம்.அந்த திட்டத்தின் மூலம் மாதம் ரூ.18000 உதவித்தொகை அவர்களுக்கு வழங்கப்படும். இந்த திட்டத்திற்கான பதிவு இன்று முதல் தொடங்கும்’ என்று தெரிவித்தார்.

The post மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கோயில் பூசாரிகளுக்கு ரூ.18,000 உதவித்தொகை: கெஜ்ரிவால் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Kejriwal ,New Delhi ,Delhi ,Aam Aadmi Party ,Gurudwara ,
× RELATED ஓட்டுக்கு பணம் தருவதை...