லாகூர்: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கடந்த 26ம் தேதி காலமானார். அவரது மறைவுக்கு உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். ஆனால் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், அவரது சகோதரரும் முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீப் ஆகியோர் இரங்கல் தெரிவிக்கவில்லை. தற்போது பாகிஸ்தானில் இது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. பொதுமக்கள் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். மன்மோகன்சிங் இந்தியாவின் பிரதமர் மட்டுமல்ல, அவர் பஞ்சாபின் சக்வால் மாவட்டத்தில் உள்ள காஹ் கிராமத்தில் பிறந்தவர், அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க கூட மனது இல்லையா என்ற கேள்வியை பாகிஸ்தான் மக்கள் எழுப்பி வருவதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பி.டி.ஐ) கட்சி இதுகுறித்து தனது எக்ஸ் பதிவில்,’ மன்மோகன் சிங்கின் இழப்புக்கு ஷெபாஸ் அல்லது நவாஸ் ஷெரீப் இதுவரை பொது இரங்கல் தெரிவிக்கவில்லை. மோடியை வருத்தினால் எதையாவது இழக்க நேரிடும் என்று அண்ணன், தம்பிகள் நினைக்கிறார்கள்’ என்று குறிப்பிட்டுள்ளது.
The post மன்மோகனுக்கு இரங்கல் தெரிவிக்காதது ஏன்? பாக்.பிரதமர், நவாசுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு appeared first on Dinakaran.