கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி இழைப் பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். கடலின் நடுவே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி இழைப் பாலம் 77 மீட்டர் நீளமும் 10 மீட்டர் அகலமும் கொண்டது. குமரியில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டதன் 25ம் ஆண்டு வெள்ளிவிழாவை ஒட்டி கண்ணாடி இழைப் பாலம் திறக்கப்பட்டுள்ளது. வெள்ளி விழாவின் அடையாளமாக வள்ளுவர் சிலை விவேகானந்தர் மண்டபம் இடையே கண்ணாடிப் பாலம் திறக்கப்பட்டது.
பேரறிவுச் சிலை’ எனப் பெயர் சூட்டப்பட்ட கல்வெட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்தியாவிலேயே முதல்முறையாக கன்னியாகுமரியில் கடலின் நடுவே கண்ணாடி இழைப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. கண்ணாடி இழைப் பாலத்தை திறந்து வைத்து அதில் நடந்து சென்று முதலமைச்சர் பார்வையிட்டார். அதனை தொடர்ந்து கன்னியாகுமரியில் கடலின் நடுவே உள்ள திருவள்ளுவர் சிலைக்கு முதலமைச்சர் மலர்தூவி மரியாதை செலுத்தினார். திருவள்ளுவர் சிலைக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.
The post திருவள்ளுவர் சிலை – விவேகானந்தர் மண்டபம் இடையே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடிப் பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.