முத்துப்பேட்டை, டிச.30: முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையத்திலிருந்து நீயூபஜார், கொய்யா முக்கம், பங்களா வாசல், ஓடக்கரை, செக்கடிக்குளம் வரையிலான பட்டுக்கோட்டை சாலை இருபுறமும் தற்பொழுது ஆக்கிரமிப்புகள் இருந்ததால் போக்குவரத்துக்கு மிகவும் இடையூறாக காணப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு நகர் முழுவதும் உள்ள நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டபோது இந்த பட்டுக்கோட்டை சாலை ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டது. ஆனாலும் தற்போது அதே நிலைதான் ஏற்பட்டுள்ளது. மீண்டும் ஆக்கிரமிப்புகள் இருந்தால் கண்டறிந்து அகற்றி தரவேண்டும் அதேபோல் இந்த சாலையில் திறந்த நிலையில் உள்ள கழிவுநீர் வடிகாலுக்கு மூடி அமைத்து தந்தால் போக்குவரத்து நெருக்கடி குறையும் அதனையும் நிறைவேற்றி தரவேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post முத்துப்பேட்டையில் சாலையோர வடிகாலுக்கு மூடி அமைத்து தர கோரிக்கை appeared first on Dinakaran.