அறுவடைக்கு 25 நாட்கள் உள்ள நிலையில் தொடர்மழையால் 90 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்: குளிமாத்தூர் கிராம விவசாயிகள் கவலை

தஞ்சாவூர், டிச. 30: திருவையாறு அருகே குளிமாத்தூர் கிராமத்தில் அறுவடைக்கு 25 நாட்களே உள்ள நிலையில் 90 ஏக்கரில் உள்ள நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். திருவையாறு அடுத்த குழி மாத்தூர் கிராமத்தில் 90 ஏக்கர் நிலபரப்பில் நெற்பயிர்கள் பயிரிடப்பட்டு உள்ளன. 25 நாட்களில் அறுவடைக்கு தயாராக வரும் வேலையில் கடந்த வாரம் பெய்த மழையினால் பயிர்கள் மூழ்கடிக்கப்பட்டன. தொண்டை கருதில் தண்ணீர் புகுந்ததனால் தண்டு உதிர்ந்து போய் வெண்மை கதிராக மாறி உள்ளது. நெற்பயிர்களில் அழுகல் நோய் ஏற்பட்டு பயிர் கருகி போய் உள்ளன. அவற்றை காப்பாற்றுவதற்கு முயற்சி செய்து வருவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

நாற்று, உழவு, நடவு என இதுவரையில் ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வரையில் செலவு செய்துள்ளோம். மேலும் கூடுதலாக பத்தாயிரம் ரூபாய் செலவு செய்து ஸ்ப்ரேயர் செய்து உரம் போட்டு காப்பாற்றும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளோம். இருந்தபோதிலும் மகசூல் எந்த அளவுக்கு கிடைக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. கூடுதல் செலவு செய்து உள்ளோம். ஏற்கனவே, வாங்கிய கடனை எப்படி அடைப்பது என்றும் தெரியாமலும் தவிர்த்து வருகிறோம். தமிழக அரசு நேரில் சென்று அதிகாரிகளை ஆய்வு செய்ய உத்தரவிட்டு ஆய்வு செய்து எங்களுக்கு உரிய நிவாரண வழங்க வேண்டும் என விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

The post அறுவடைக்கு 25 நாட்கள் உள்ள நிலையில் தொடர்மழையால் 90 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்: குளிமாத்தூர் கிராம விவசாயிகள் கவலை appeared first on Dinakaran.

Related Stories: