கடந்த கால பயிர் கடனை செலுத்த கால அவகாசம் வேண்டும்: விவசாய சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை

வேதாரண்யம், டிச. 30: நாகை மாவட்டத்தில் கடந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் போதிய அளவு திறக்கபடாத காரணத்தால் குறுவை மற்றும் சம்பா சாகுபடி மேற்கொண்ட விவசாயிகள் பெரிய அளவில் மகசூல் இழப்பை சந்தித்தனர். மேலும் பாதிப்பிற்கு ஏற்ப இழப்பீடு வழங்க வேண்டிய இப்கோ டோக்கியோ காப்பீடு நிறுவனம் உரிய இழப்பீடு வழங்காமல் மோசடியாக விவசாயிகளை ஏமாற்றியது. இதனால் பயிர் கடன் பெற்ற ஏழை விவசாயிகள் அதை திரும்ப செலுத்த இயலாத நிலைக்கு ஆளாயினர்.

எனவே கூட்டுறவு வங்கிகளில் கடந்த ஆண்டு ஏழை விவசாயிகள் பெற்ற பயிர் கடனை மத்திய கால கடனாக மாற்றி அமைத்து , நடப்பாண்டில் புதிய பயிர் கடன் வழங்குமாறு விவசாயிகள் கோரிக்கையை முன் வைத்தனர். கடனை திருப்பி செலுத்த முடியாததால், பயிர்கடன் பெற முடியாமல் தனியாரிடம் வட்டிக்கு பணம் பெற்று சாகுபடி பணியை மேற்கொண்ட நிலையில், தற்போது பெய்த கனமழையால் பயிர்கள் சேதமடைந்து, அரசின் உதவியை எதிர்நோக்கியுள்ள விவசாயிகள், அதிகாரிகளின் விதிமுறைகளுக்கு புறம்பான கடன் வசூல் நடவடிக்கை காரணமாக அச்சத்தில் உள்ளனர் எனவே மாவட்ட கலெக்டர் விவசாயிகள் கடனை திரும்ப செலுத்த உரிய கால அவகாசம் அளிக்க வேண்டும் என தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கமல்ராம் கோரிக்கை விடுத்துள்ளார்.

The post கடந்த கால பயிர் கடனை செலுத்த கால அவகாசம் வேண்டும்: விவசாய சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: