×

வாக்காளர்களை நீக்க ஆபரேஷன் தாமரை டெல்லி பேரவை தேர்தலில் முறைகேடு செய்து வெற்றி பெற சூழ்ச்சி: பாஜ மீது ஆம் ஆத்மி கடும் குற்றச்சாட்டு

புதுடெல்லி,:ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால், டெல்லி முதல்வர் அடிசி மற்றும் ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் ராகவ் சதா ஆகியோர் நேற்று கூட்டாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய கெஜ்ரிவால், “டெல்லி தேர்தலில் பாஜ ஏற்கனவே தோல்வி அடைந்துள்ளது. அவர்களிடம் முதல்வர் பதவிக்கு நிறுத்த நம்பகமான வேட்பாளர்கள் இல்லை. தொலைநோக்கு பார்வையுடன் கூடிய திட்டங்கள் இல்லை. இதனால் முறைகேடுகளை செய்து வெற்றி பெற பாஜ முயற்சிக்கிறது. ஒரு தொகுதியில் மட்டும் 11,000 வாக்காளர்களை நீக்க பாஜ விண்ணப்பம் செய்த சதியை ஆம் ஆத்மி அம்பலப்படுத்தியததால், தலைமை தேர்தல் ஆணையத்தின் தலையீட்டால் அந்த சதி தடுக்கப்பட்டது.

என் சொந்த தொகுதியான புதுடெல்லி தொகுதியில் 5,000 வாக்காளர்களை நீக்கவும், 7,000 வாக்காளர்களை சேர்க்கவும் கடந்த 15ம் தேதி முதல் ஆபரேஷன் தாமரை செயலில் பாஜ ஈடுபட்டுள்ளது. இதன் மூலம் தொகுதியில் 12 சதவீத வாக்குகளை மாற்ற முடியும். புதுடெல்லி தொகுதியில் கடந்த ஆகஸ்ட் 20 முதல் அக்டோபர் 20 வரை செய்யப்பட்ட சுருக்க திருத்தத்துக்கு பிறகு அக்டோபர் 29ம் தேதி வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் ஆணையம் வௌியிட்டது.

அதன்படி, புதுடெல்லி தொகுதியில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 1,06,873 ஆகும்.
பாஜ தேர்தல் முடிவை மாற்ற வாக்காளர் பட்டியலை கையாள முயல்கிறது. இதை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

The post வாக்காளர்களை நீக்க ஆபரேஷன் தாமரை டெல்லி பேரவை தேர்தலில் முறைகேடு செய்து வெற்றி பெற சூழ்ச்சி: பாஜ மீது ஆம் ஆத்மி கடும் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Operation ,Delhi council ,Yes ,Atmi ,Baja ,New Delhi ,National Coordinator ,Kejriwal ,Delhi ,Addis ,Ragav Chada ,Operation Lotus ,council ,Bajaa ,Dinakaran ,
× RELATED டெல்லியில் ஆம் ஆத்மியுடன் காங்....