×

அரசின் இலவச திட்டங்களை பெறுவதில் தூய்மை பணியாளர்களுக்கு முன்னுரிமை: மாநில மாநாட்டில் தீர்மானம்

தென்காசி: அரசின் இலவச திட்டங்களை பெறுவதில் தூய்மைப் பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என குற்றாலத்தில் நடந்த தமிழ்நாடு தூய்மை தொழிலாளர் நலச்சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு தூய்மை தொழிலாளர் நலச்சங்கத்தின் சார்பில் மாநில மாநாடு குற்றாலத்தில் நடந்தது. மாநில தலைவர் சக்திவேல் மாநாட்டிற்கு தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் மாரிமுத்து வரவேற்றார்.

மாநில செயலாளர் முருகேசன், மாநில செயற்குழு உறுப்பினர் குருவம்மாள், தென்காசி மாவட்ட சுகாதார ஊக்குநர் ராஜேஸ்வரி, மாநிலத் துணைப் பொருளாளர் கனகலட்சுமி, தென்காசி மாவட்டத் தலைவர் புதியவன், மாவட்டச் செயலாளர் பெருமாள்சாமி, பொருளாளர் மூர்த்தி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வருடாந்திர தமிழக பட்ஜெட்டில் தூய்மைப் பணியாளர்களுக்கென தனி நிதிநிலை உருவாக்க வேண்டும். அரசின் இலவச திட்டங்களைப் பெறுவதில் தூய்மைப் பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post அரசின் இலவச திட்டங்களை பெறுவதில் தூய்மை பணியாளர்களுக்கு முன்னுரிமை: மாநில மாநாட்டில் தீர்மானம் appeared first on Dinakaran.

Tags : Tenkasi ,Tamil Nadu Sanitation Workers Welfare Association ,Courtallam ,
× RELATED மணிமுத்தாறு அருவி, குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை..!!