- கொள்ளைக்காரன்
- சோலிங்கர் லட்சுமி நரசிம்மர் கோய
- சோளிங்கர்
- Robkar
- ராணிப்பேட்டை மாவட்டம்
- லட்சுமி நரசிமர் கோயில்
- ரோபோகார்
- இக்கோயில்
- சோளிங்கர் லட்சுமி
- நரசிமர்
- கோவில்
- தின மலர்
சோளிங்கர்: சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயிலில் வரும் 1ம் தேதி ரோப்கார் சேவை நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் அமைந்துள்ள லட்சுமி நரசிம்மர் கோயில் 1,305 படிகள் கொண்ட மலை மீது அமைந்துள்ளது. இக்கோயிலில் பக்தர்களின் வசதிக்காக ரோப்கார் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த ரோப்கார் தினமும் காலை 8.30 மணி முதல் மாலை 5 மணி வரை இயக்கப்படும், வெள்ளிக்கிழமை மட்டும் 9.30 மணி முதல் மாலை 6 மணிவரை இயக்கப்படுகிறது. பொதுவாக வெள்ளி. சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். இந்நிலையில் ஜனவரி 1ம் தேதி ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக ரோப்கார் சேவை காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை இயக்கப்படும் என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
The post சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயிலில் வரும் 1ம் தேதி ரோப்கார் சேவை நேரம் அதிகரிப்பு appeared first on Dinakaran.