சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் முடிவடைய இன்னும் சில நாட்கள் உள்ள நிலையில், மழை பெய்வது சற்று குறைந்துள்ளது. இருப்பினும் ஒரு சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்துள்ளது. கடந்த வாரம் போக்குக் காட்டிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி வங்கக் கடல் பகுதியில் இருந்து விலகியுள்ளது. இதற்கிடையே, தென் தமிழகத்தில் இரு காற்று இணைவு நிகழ்ந்துள்ளது. அதன் காரணமாக தென் மாவட்டங்களில் சில இடங்களில் நேற்று ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்துள்ளது.
இதற்கிடையே தென் கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. அதன் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 31ம் தேதியில் தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை,காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதன் தொடர்ச்சியாக ஜனவரி 1ம் தேதி முதல் 4ம் தேதி வரையில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
The post தமிழ்நாட்டில் வரும் 4ம் தேதி வரை லேசான மழை பெய்யும் appeared first on Dinakaran.