இந்தவகையில், நேற்று முன்தினம் அவ்வழியே கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன்மலைக்கு சென்ற சுற்றுலா பேருந்தை மதுவிலக்கு ஏட்டுகள் செந்தில்குமார், முத்தரசு, சுகவனேஸ்வரன் ஆகியோர் சோதனையிட்டனர். அந்த பேருந்தில் உ.பி.யை சேர்ந்த ஆன்மீக சுற்றுலா பயணிகள் இருந்தனர். டிரைவர் சிவநாராயணன் (52), கிளீனர் அஜய் (20) ஆகியோர் தங்கள் வண்டியில் ஒன்றுமில்லை எனக்கூறி போலீஸ்காரர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதில், டிரைவர், கிளீனர் இருவரும் சேர்ந்து போலீஸ் ஏட்டுகளை இரும்பு பைப்பால் தாக்கினர். பதிலுக்கு ஏட்டுகளும் அவர்களை தாக்கினர்.
போலீசாருடன் கடும் மோதல் ஏற்பட்ட நிலையில், அவ்வழியே வந்த வாகன ஓட்டிகள் தடுத்து நிறுத்தினர். சம்பவ இடம் வந்த மேட்டூர் டிஎஸ்பி ஆரோக்கியராஜ், கொளத்தூர் இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன் தலைமையிலான போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட உ.பி. ஆன்மீக சுற்றுலா பேருந்து டிரைவர் சிவநாராயணன், கிளீனர் அஜய் ஆகியோரை பிடித்து வந்தனர். ஏட்டு செந்தில்குமார் புகாரின் பேரில் அவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிந்து கைது செய்தனர். பிறகு அவர்களை ஜாமீனில் விடுவித்தனர். உடனே அவர்கள், சுற்றுலா பேருந்தை எடுத்துக்கொண்டு கர்நாடகா சென்றனர்.
இதனிடையே டிரைவர் சிவநாராயணன், போலீஸ் ஏட்டுகள் மீது கொளத்தூர் போலீசில் புகார் கொடுத்திருந்தார். அந்த புகார் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தினர். இம்மோதல் விவகாரம் தொடர்பாக மாவட்ட எஸ்பி கௌதம்கோயல் நேரடி விசாரணை நடத்தினார். அதில், சோதனைச்சாவடியை கடந்த பேருந்து டிரைவரிடம் லைசென்ஸ், பர்மிட் உள்ளிட்டவைகளை கேட்டுள்ளனர். சரியான பதில் வராததால், வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாகியது தெரியவந்தது. இதையடுத்து டிரைவர் சிவநாராயணன் புகாரின் பேரிலும் வழக்கு நடவடிக்கை எடுக்க எஸ்பி உத்தரவிட்டார்.
இதன்பேரில் கொளத்தூர் போலீசில், ஏட்டுகள் செந்தில்குமார், முத்தரசு, சுகவனேஸ்வரன் ஆகியோர் மீது ஆபாசமாக பேசியது, தாக்கியது என 2 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து, துறை ரீதியான விசாரணையின் அடிப்படையில், மதுவிலக்கு பிரிவு ஏட்டுகள் செந்தில்குமார், முத்தரசு, சுகவனேஸ்வரன் ஆகிய 3 பேரையும் சஸ்பெண்ட் செய்து, எஸ்பி கௌதம்கோயல் உத்தரவிட்டார்.
The post மேட்டூர் சோதனைச்சாவடி மோதல் விவகாரம்: மதுவிலக்கு பிரிவு ஏட்டுகள் 3 பேர் அதிரடி சஸ்பெண்ட் appeared first on Dinakaran.