நெருப்பை கக்கிய தமிழக பேட்டிங் பனியாய் கரைந்த காஷ்மீர்: 191 ரன் வித்தியாசத்தில் படுதோல்வி

விஜயநகரம்: விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒரு நாள் போட்டியில் நேற்று ஜம்மு காஷ்மீரை தமிழ்நாடு அணி 191 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. ‘டி’ பிரிவில் நடந்த போட்டியில் முதலில் களமிறங்கிய தமிழ்நாடு துவக்க வீரர் நாரயண் ஜெகதீசன், 147 பந்துகளை எதிர்கொண்டு 4 சிக்சர், 17 பவுண்டரிகளுடன் அனாயாசமாக ஆடி 165 ரன் குவித்தார். பாபா இந்திரஜித் 76 பந்தில் 78 ரன் எடுத்தார். 50 ஓவர் முடிவில் தமிழ்நாடு, 6 விக்கெட் இழப்புக்கு 353 ரன் குவித்தது.

இதையடுத்து, களமிறங்கிய ஜம்மு காஷ்மீர் வீரர்கள் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தமிழ்நாடு பந்து வீச்சாளர்களின் பந்துகளை சமாளிக்க முடியாமல் திணறிய அவர்கள் 36.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 162 ரன் மட்டுமே எடுத்தனர். தமிழ்நாடு பந்து வீச்சாளர் வெங்கட அச்யுத் 6 விக்கெட் வீழ்த்தினார். இதனால், தமிழ்நாடு அணி 191 ரன் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றது. இந்த வெற்றியை அடுத்து ‘டி’ பிரிவில் தமிழ்நாடு 10 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் நீடிக்கிறது. விதர்பா அணி 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

The post நெருப்பை கக்கிய தமிழக பேட்டிங் பனியாய் கரைந்த காஷ்மீர்: 191 ரன் வித்தியாசத்தில் படுதோல்வி appeared first on Dinakaran.

Related Stories: