சதுரகிரியில் பிரதோஷ வழிபாடு: ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்


வத்திராயிருப்பு: மார்கழி மாத பிரதோஷத்தையொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் இன்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. இங்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமிக்கு தலா 3 நாள், பிரதோஷத்திற்கு 2 நாள் என 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கின்றனர். இதன்படி, மார்கழி மாத பிரதோஷம், அமாவாசையை முன்னிட்டு இன்று (டிச.28) முதல் வரும் 31ம் தேதி வரை 4 நாள்கள் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இன்று பிரதோஷத்தையொட்டி சென்னை, திருச்சி, திருநெல்வேலி, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் அதிகாலையிலேயே தாணிப்பாறை வனத்துறை கேட் பகுதியில் குவிந்தனர். காலை 6 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டது. கடும் பனியையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைப்பாதை வழியாக கோயிலுக்குச் சென்றனர். பிரதோஷத்தையொட்டி இன்று மாலை சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடக்கின்றன. இதற்கான ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர், கோயில் நிர்வாகி செய்து வருகின்றனர்.

The post சதுரகிரியில் பிரதோஷ வழிபாடு: ஏராளமான பக்தர்கள் குவிந்தனர் appeared first on Dinakaran.

Related Stories: