தமிழ் ஆட்சிமொழி சட்ட வாரம் வணிகர்களுக்கு விழிப்புணர்வு

சென்னை: தமிழ் ஆட்சிமொழி சட்ட வாரத்தை முன்னிட்டு, சென்னையில் உள்ள தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைமை அலுவலகத்தில் தமிழில் பெயர்பலகை வைப்பது குறித்து வணிகர்களுக்கு விழிப்புணர்வுக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தென்சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் என்.டி.மோகன் தலைமை தாங்கினார். மாநிலப் பொருளாளர் ஏ.எம்.சதக்கத்துல்லா, தலைமைச்செயலாளர் ஆர்.ராஜ்குமார் ஆகியோர் தமிழ் ஆட்சிமொழி விழிப்புணர்வு உரையாற்றினர்.

மாநில செய்தி தொடர்பாளர் பி.பாண்டியராஜன், தென்சென்னை வடக்கு மாவட்டத்தலைவர் ஒய்.எட்வர்ட், வடசென்னை மேற்கு மாவட்டத் தலைவர் என்.ஜெயபால், வடசென்னை கிழக்கு மாவட்டச் செயலாளார் டி.சகரியா சரவணன், பழையபொருள் அணி தலைவர் இ.எம்.ஜெயக்குமார், மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குனர் பவானி பங்கேற்று கருத்துரை வழங்கினார்

The post தமிழ் ஆட்சிமொழி சட்ட வாரம் வணிகர்களுக்கு விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Related Stories: