காவிரி நீர்த்தேக்கத்தில் கலந்துவிட்ட பர்னஸ் எண்ணெய் நவீன கருவிகளை கொண்டு விரைந்து நீக்க வேண்டும்: துரை வைகோ வலியுறுத்தல்

சென்னை: மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த 19ம்தேதி அன்று மேட்டூர் அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தினால் நிலக்கரி சேமிப்பு தொட்டி உடைந்ததாகவும், அந்த விபத்தில் இருவர் உயிரிழந்ததாகவும் செய்திகள் வருகின்றன. அதுமட்டுமல்லாமல், அந்த விபத்தில் நிலக்கரியை எரியூட்ட பயன்படுத்தப்படும் சுமார் 10,000 லிட்டர் பர்னஸ் எண்ணெய் மேட்டூர் உபரி நீர் கால்வாய்க்கு சென்று கலந்து விட்டதாகவும் ஒரு அபாய செய்தி கிடைக்கப் பெறுகிறேன்.

இந்தச் சூழ்நிலையில் அதிகாரிகள் வெறும் வைகோல்களைக் கொண்டு எண்ணெய்யை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இது முற்றிலும் போதுமான நடவடிக்கையாக இருக்காது. மேலும் அணையின் நீர்மட்டம் வெகுவாக உயர்வதாலும் அப்படி அது கொள்ளளவை எட்டினால், அணையை திறந்து நீரை வெளியேற்ற நேரிடும் போது பர்னஸ் எண்ணை காவிரி ஆறு முழுதும் கலந்து மனிதர்கள், சுற்றுச்சூழல், விவசாயம் மற்றும் நீர்வாழ் உயிரினங்களுக்கு தீவிர பாதிப்புகளை உண்டாக்கக் கூடும்.

எனவே பர்னஸ் எண்ணெய் காவிரி ஆற்றில் கலந்து மனிதர்களுக்கும், மண்வளத்திற்கும், பிற உயிரினங்களுக்கும் கேடாய் அமைந்துவிடுவதற்கு முன்பாக அவசரகால நடவடிக்கை எடுத்து, நவீன கருவிகளைக் கொண்டு காவிரி நீரில் கலந்துவிட்ட பர்னஸ் எண்ணெய்யை முழுவதுமாக விரைந்து நீக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post காவிரி நீர்த்தேக்கத்தில் கலந்துவிட்ட பர்னஸ் எண்ணெய் நவீன கருவிகளை கொண்டு விரைந்து நீக்க வேண்டும்: துரை வைகோ வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: