கொடைக்கானல் மலைக் கிராமங்களுக்கிடையே பாலம்: மலைவாழ் மக்களின் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை

திண்டுக்கல்: கொடைக்கானல் அருகே மலை கிராமங்களில் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாதது குறித்து செய்தி வெளியான நிலையில் கல்லாற்றின் குறுக்கே பாலம் அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கி இருக்கின்றன. புகழ் பெட்ரா சுற்றுலா தலமான கொடைக்கானலை சுற்றி ஏராளமான மலை கிராமங்கள் உள்ளன. இவற்றில் சின்னூர், சின்னூர் காலணி உள்ளிட்ட மலை கிராமங்களும் அடங்கும் இந்த கிராமங்களுக்கு சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் அங்கு வசிக்கும் மக்கள் தவித்து வருகின்றனர். அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே செல்லும் போது கல்லாறு, குப்பம் பாறை உள்ளிட்ட இரண்டு பெறும் ஆறுகளை கடந்து தான் செல்ல வேண்டும்.

அவ்வாறு அண்மையில் பெய்த கனமழையால் கல்லாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது . இதில் சிக்கியவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். கல்லாறு மற்றும் குப்பம் பாறை ஆறுகளுக்கு இடையே பாலம் அமைக்கவும், தங்கள் கிராமங்களுக்கு சாலை அமைக்கவும் மக்கள் விடுத்த கோரிக்கை குறித்து செய்தி வெளியான நிலையில் கல்லாற்றில் பாலம் அமைக்கும் பணி தொடங்கி உள்ளது. இதற்காக அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்து கொண்டுள்ளனர். கல்லாறு பாலம் முடிந்த பிறகு சாலை அமைக்கும் பணி விரைவில் துவங்கும் என்று பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் குமார் தெரிவித்துள்ளார். நீண்ட கால கோரிக்கை தற்போது நிறைவேற இருப்பதால் மலைகிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post கொடைக்கானல் மலைக் கிராமங்களுக்கிடையே பாலம்: மலைவாழ் மக்களின் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: