கஜகஸ்தானில் தரையிறங்கும்போது விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 42 ஆக உயர்வு

கஜகஸ்தான்: நாட்டில் ஏர்லைன்ஸின் பாகு-க்ரோஸ்னி விமானம் மேற்கு கஜகஸ்தானின் அக்டாவ் அருகே அவசரமாக தரையிறக்க முயற்சி செய்தபோது தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 72 பயணிகளுடன் சென்ற விமானம் நடுவானில் வெடித்துச் சிதறியது. இதில், பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுவதாக முதற்கட்டமாக தகவல்கள் வெளியானது. விபத்து சம்பவத்தை தொடர்ந்து, உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு இதனை பற்றிய தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இப்பொது, மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றது. ஏற்கனவே, விபத்தில் 14 பேருக்கு மேல் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்த சூழலில், விபத்தில் விமானத்தில் பயணம் செய்தவர்களின் நிலை என்ன? என்பது பற்றிய தகவல் தற்போது வெளிவந்திருக்கிறது. அதன்படி, இந்த விபத்தில் இதுவரை 42 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. மேலும் சிலர் படுகாயம் அடைந்துள்ளதால் இன்னும் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது ” விபத்துக்குள்ளான Embraer E190AR விமானம், Baku-Grozny பாதைக்கு அருகே சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட போது விபத்து ஏற்பட்டது. காலை 6:28 UTC (காலை 11:58), விமான நிலையத்திலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள காஸ்பியன் கடல் கடற்கரைக்கு அருகில் விமானம் விபத்துக்குள்ளானது. விபத்திற்கான காரணம் பற்றிய விசாரணையும் நடந்து வருகிறது” எனவும் தெரிவித்தார்.

The post கஜகஸ்தானில் தரையிறங்கும்போது விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 42 ஆக உயர்வு appeared first on Dinakaran.

Related Stories: