கோயிலில் புகுந்த நல்ல பாம்பு: ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம்

திருவள்ளூர்: பேரம்பாக்கத்தில் உள்ள சோளீஸ்வரர் கோயிலில் நல்ல பாம்பு புகுந்ததால் ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கம் கிராமத்தில் பழமை வாய்ந்த காமாட்சி அம்மன் சமேத சோளீஸ்வரர் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலில் நேற்று காலை மடப்பள்ளியில் சுமார் 3 அடி நீளம் உள்ள நல்ல பாம்பு ஒன்று புகுந்தது.

இதனைக் கண்ட அங்கு இருந்த பணியாளர்கள் அலறியடித்தபடி வெளியே ஓடிவந்தனர். இதுகுறித்து அவர்கள் பேரம்பாக்கத்தில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கோயில் வளாகத்தில் மடப்பள்ளியில் இருந்த நல்ல பாம்பை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் பத்திரமாக பிடித்து காட்டில் விட்டனர். இதன் காரணமாக கோயில் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post கோயிலில் புகுந்த நல்ல பாம்பு: ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம் appeared first on Dinakaran.

Related Stories: