அந்த மனுவில் கூறியிருந்ததாவது, பட்டாபிராம், அம்பேத்கர் நகர் பகுதி மற்றும் நெமிலிச்சேரி ஊராட்சியில் 800க்கும் மேற்பட்ட ஏழை, எளிய கூலி தொழிலாளிகள் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வீடுகளை கட்டிக்கொண்டு வசித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த வீடுகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று வருவாய் துறை சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதியில் வசிப்பவர்கள் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் கூலித் தொழிலாளிகள். இவர்கள் கடன் வாங்கிதான் வீடுகளை கட்டி வசித்து வருகின்றனர். இவர்களது வீடுகளை அப்புறப்படுத்தினால் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும். எனவே வருவாய் துறையினர் கொடுத்துள்ள நோட்டீஸ் மீது மறுபரிசீலனை செய்து ஏழை, எளிய கூலித் தொழிலாளர்கள் வசிக்கும் வீடுகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளனர்.
The post இலவச வீட்டு மனைபட்டா வழங்கக்கோரி கலெக்டரிடம் மனு appeared first on Dinakaran.