நாமகிரிப்பேட்டை, டிச. 27: நாமகிரிப்பேட்டை வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நேற்று கொப்பரை ஏலம் நடந்தது. பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயகிள் 5,200 கிலோ கொப்பரையை ஏலத்துக்கு கொண்டு வந்திருந்தனர். இதை கொள்முதல் செய்ய பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்துகொண்டனர். விவசாயிகள் முன்னிலையயில் அதிகாரிகள் மின்னணு ஏலம் நடத்தினர். அதில் முதல்தரம் கொப்பரை குவிண்டால் அதிகபட்சம் ₹14,547க்கும் குறைந்தபட்சம் ₹13,799க்கும், சராசரியாக ₹14 ஆயிரத்துக்கும் விற்பனையானது. இரண்டாம் தரம் கொப்பரை குவிண்டால் அதிகபட்சம் ₹13,199க்கும், குறைந்தபட்சம் ₹9,899க்கும், சராசரியாக ₹11,901க்கும் விற்பனையானது. ஒட்டு மொத்மதாக விவசாயிகள் கொண்டு வந்த 5,200 கிலோ கொப்பரை ₹6,76 லட்சத்துக்கு விற்பனையானது என அதிகாரிகள் தெரிவித்தனர். ஏலத்தில் கொப்பரைக்கு நல்ல விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
The post 6.76 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் appeared first on Dinakaran.