இதனால் ஆத்திரமடைந்த சண்முகராஜா நேற்று முன்தினம் நள்ளிரவு, அவரது நண்பர் நிசாஷ் என்பவருடன் சேர்ந்து ஹரிஷ் வீட்டிற்கு அருகே சென்று ரகளையில் ஈடுபட்டு உள்ளார். மிரட்டுவதற்காகவும், கெத்து காண்பிப்பதற்காகவும் மதுபாட்டிலில் பெட்ரோலை நிரப்பி அவரது வீட்டிற்கு அருகே நின்று, ப்ரி பயர் கேமில் விளையாடுவது போன்று ஹரிஷ் வீட்டு சுவர் மீது பெட்ரோல் குண்டை வீசியுள்ளனர். அது பயங்கர சத்தத்துடன் வெடித்ததால் இருவரும் தப்பியோடினர். இதுகுறித்து தகவல் அறிந்த மாநகர போலீசார் சென்று விசாரணை நடத்தி, சண்முகராஜாவை நேற்று கைது செய்தனர். தலைமறைவாக உள்ள நிசாஷை தேடி வருகின்றனர்.
The post ப்ரி பையர் விளையாட்டில் தகராறு பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர் கைது appeared first on Dinakaran.