சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-123, லஸ் சர்ச் சாலை, காவேரி மருத்துவமனை அருகில் உள்ள போக்குவரத்து தீவிற்கு “இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் போக்குவரத்து தீவு” என பெயர் சூட்ட, முதல்வர் மு.க.ஸ்டாலினால் உத்தரவிடப்பட்டது. இதனை தொடர்ந்து, லஸ் சர்ச் சாலை போக்குவரத்து தீவில் நேற்று நடைபெற்ற விழாவில், புதிதாக பெயர் சூட்டப்பட்ட “இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் போக்குவரத்து தீவு” என்ற பெயர் பலகையை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் மேயர் பிரியா, தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி, மயிலாப்பூர் எம்எல்ஏ த.வேலு, துணை மேயர் மு.மகேஷ்குமார், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய தலைவர் பூச்சி எஸ்.முருகன், மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், மண்டல குழு தலைவர் எஸ்.மதன்மோகன், மாமன்ற உறுப்பினர் சரஸ்வதி, இயக்குநர் கே.பாலசந்தரின் மகள் புஷ்பா கந்தசாமி மற்றும் குடும்பத்தினர், ரசிகர்கள் சங்க நிர்வாகிகள் நடிகர் ராஜேஷ், வி.பாபு, முகமது இலியாஸ், நடிகர் கலைமாமணி பூவிலங்கு மோகன், நடிகர் தசரதி, ஒளிப்பதிவாளர் விக்ரமன், தமிழ்நாடு இயக்குநர் சங்க பொதுச் செயலாளர்/ இயக்குநர் பேரரசு, பொருளாளர் சரண், தமிழ்நாடு சின்னத்திரை இயக்குநர்கள் சங்கம்/ தமிழ்நாடு சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு சங்க தலைவர் மங்கை அரிராஜன், சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் சிவன் சீனிவாசன், திரையுலக பிரமுகர்கள்/ நடிகர்கள் எஸ்.வி.சேகர், பிரமிட் நடராஜன், அழகு, டி.வி.வரதராஜன், நாகேஷ் ஆனந்த்பாபு, நடிகை காயத்ரி ரகுராம், திரைப்பட இயக்குநர்கள் வசந்த், நாகா, கலை இயக்குநர் சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post மயிலாப்பூர் லஸ் சர்ச் சாலையில் உள்ள போக்குவரத்து தீவிற்கு இயக்குநர் கே.பாலசந்தர் பெயர்: அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார் appeared first on Dinakaran.