- சுனிதா வில்லியம்ஸ்'
- கிறிஸ்துமஸ்
- நாசா
- வாஷிங்டன்
- சுனிதா வில்லியம்ஸ்'
- சர்வதேச விண்வெளி நிலையம்
- பாரி வில்மோர்
வாஷிங்டன்: சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கி தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில், நாசா விளக்கம் அளித்துள்ளது. விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், பாரி வில்மோர் கடந்த ஜூன் 5ம் தேதி போயிங் ஸ்டார்லைனர் சோதனை விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்றனர். 8 நாட்கள் பயணத்தை முடித்து விட்டு மீண்டும் பூமி திரும்ப முற்பட்ட போது அவர்கள் பயணித்த போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பு கருதி போயிங் ஸ்டார்லைனர் ஆளில்லாமல் இயக்கப்பட்டு பூமிக்கு கொண்டுவரப்பட்டது.
இந்த நிலையில் தான் சுனிதாவும், வில்மோரும் சர்வதேச விண்வெளி மையத்திலேயே தங்கி பணியை தொடர்ந்து வருகின்றனர். இவர்களை அழைத்துவர ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றடைந்துள்ளது. அப்படி இவர்களது பயணம் பிப்ரவரியில் திட்டமிடப்பட்டு இருந்த நிலையில், அவர்களுக்கு மாற்றாக விண்வெளிக்கு வர இருப்பவர்களின் டிராகன் விண்கலத்தின் தயார் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரையும் பூமிக்கு அழைத்து வரும் திட்டம் மார்ச் மாதத்திற்கு மாறியுள்ளது.
இந்நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகையை அவர்கள் விண்வெளியில் கொண்டாடி உள்ளனர். கிறிஸ்துமஸ் தோப்பி உள்ளிட்ட அலங்கார பொருட்களோடு உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்த வீடியோவை வெளியிட்ட நாசா, கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியை பகிர்ந்து இருந்தது. இந்த நிலையில் தான் வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் சுனிதாவும், பாரி வில்மோரும் தற்செயலாக சிக்கி உள்ளனர். முன்பே திட்டமிடப்படாத இந்த பயணத்தில் அவர்களுக்கான கிறிஸ்துமஸ் உடைகள், உபகரணங்கள் எப்படி வந்தது. எனில் இது ஏற்கனவே திட்டமிடப்பட்டு இருந்ததா என்று பல்வேறு சர்ச்சைகளை கிளப்பின.
இதனையடுத்து நாசா அமைப்பானது வீடியோ குறித்து விளக்கம் ஒன்றை வெளியிட்டது. அதில், கடந்த நவம்பர் மாதம், இந்த கிறிஸ்துமஸ் மரம் மற்றும் அலங்கார பொருட்கள் ஸ்பேஸ் எக்ஸ் மூலம், அனுப்பி வைக்கப்பட்டது. அதில் உருளைக்கிழங்கு, காய்கறிகள், துண்டுகள் மற்றும் குக்கீகள் உள்ளிட்ட கிறிஸ்துமஸ் உணவுகளும் இருந்தன. இது தவிர, சில அறிவியல் பொருட்களும் இருந்தன. குறிப்பாக ஒரு குடும்பமாக அங்கு தங்கி உழைத்து வரும் விண்வெளி வீரர்களை உற்சாகப்படுத்தவே இத்தனை முயற்சிகள் என்றும், நாசா கூறியுள்ளது.
The post விண்வெளியில் கிறிஸ்துமஸ் கொண்டாடிய சுனிதா வில்லியம்ஸ் வீடியோவால் சர்ச்சை: நாசா விளக்கம் appeared first on Dinakaran.