சென்னை: சென்னையில் இருந்து 113 பேருடன் பெங்களூரு புறப்பட்ட இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் அவசரமாக தரையிறங்கியது. சென்னை – பெங்களூருக்கு செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் காலை 8.40 மணிக்கு 107 பயணிகள் மற்றும் 6 ஊழியர்கள் உள்ளிட்ட 113 பேருடன் விமானம் புறப்பட்டது. இந்த விமானம் பெங்களூரை நோக்கி சென்ற நிலையில், விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்தார். இதனையடுத்து விமானி கட்டுப்பட்டு அறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், விமானத்தை சென்னையில் தரையிறக்க உத்தரவிடப்பட்டது. இதனை அடுத்து விமானம் காலை 9.05 மணிக்கு மீண்டும் சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த பயணிகளை இறக்கிவிடப்பட்டு, ஓய்வு அறையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும், விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறுகளை விமான பொறியாளர்கள் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இயந்திர கோளாறு சரிசெய்யப்பட்டு பிறகு மீண்டும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் பெங்களூரு செல்லும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
The post இயந்திர கோளாறு: சென்னை – பெங்களூரு புறப்பட்ட இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் அவசரமாக தரையிறக்கம்! appeared first on Dinakaran.