மாணவி பாலியல் சீண்டலுக்கு உள்ளான புகாரில் துரித நடவடிக்கை: அமைச்சர் டிவிட்

சென்னை: மாணவி பாலியல் சீண்டலுக்குள்ளானதாக புகாரில் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெகு விரைவில் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் என்று அமைச்சர் கோவி.செழியன் கூறியுள்ளார். தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: கிண்டி பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். தனிப்பட்ட ஒரு மாணவி பாதிக்கப்பட்டுள்ள இச்சம்பவத்தை அரசியலாக்க விரும்புகிறவர்கள் கடந்த ஆட்சியில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் அன்றைய ஆட்சியாளர்களின் அழுத்தத்தால் காவல்துறையில் புகார் அளிக்கக் கூட பாதிக்கப்பட்டவர்கள் பயந்தனர் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். திமுக ஆட்சியில் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெகு விரைவில் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர். இது போன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்க பல்கலைக் கழக அளவில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து உரிய முடிவுகள் எடுக்கப்படும். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

The post மாணவி பாலியல் சீண்டலுக்கு உள்ளான புகாரில் துரித நடவடிக்கை: அமைச்சர் டிவிட் appeared first on Dinakaran.

Related Stories: