கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்களின் விலை 3 மடங்கு உயர்வு: அனைத்தும் விற்றுத் தீர்ந்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி

சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்களின் விலை 3 மடங்கு உயர்ந்தது. அனைத்து பூக்களும் விறுவிறுப்பாக விற்று தீர்ந்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஒரு கிலோ மல்லி 2,300 ரூபாயிலிருந்து 2,700க்கும், ஐஸ் மல்லி 1,800லிருந்து 2,500க்கும் முல்லை 900க்கும் ஜாதி மல்லி 700க்கும் கனகாம்பரம் 800லிருந்து 1000க்கும் சாமந்தி 100லிருந்து 80க்கும் சம்பங்கி 100க்கும் அரளி பூ 400லிருந்து 250க்கும் பன்னீர் ரோஸ் 120லிருந்து 100க்கும் சாக்லேட் ரோஸ் 180லிருந்து 140க்கும் விற்பனையானது.

இதுகுறித்து, கோயம்பேடு பூ மார்க்கெட் துணை தலைவர் முத்துராஜ் கூறுகையில், ‘‘கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு மல்லி, ஜாதி மல்லி, முல்லை, கனகாம்பரம் ஆகிய பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. பூக்களின் விலை உயர்ந்தாலும் பண்டிகை நாள் என்பதால் சென்னை மற்றும் புறநகர் சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பூக்களை வாங்குவதற்கு அதிக அளவில் குவிந்ததால் வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது. இதன் காரணமாக, விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். அதேபோல் சாமந்தி, சம்பங்கி, பன்னீர் ரோஸ், சாக்லேட் ரோஸ் ஆகிய பூக்களின் விலை சற்று குறைந்ததால் பூக்களின் வியாபாரம் கூட விறுவிறுப்பாக நடந்தது. அனைத்து பூக்களும் சற்று நேரத்தில் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

The post கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்களின் விலை 3 மடங்கு உயர்வு: அனைத்தும் விற்றுத் தீர்ந்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: