சிம்லா, மணாலி, காஷ்மீரில் பனிப்பொழிவு; இமாச்சலில் ‘ஒயிட் கிறிஸ்துமஸ்’ கொண்டாட்டம்: 4 பேர் பலி; 200 சாலைகள் மூடல்

சிம்லா: சிம்லா, மணாலி, காஷ்மீரில் பனிப்பொழிவு அதிகமாக உள்ளதால் இமாச்சலில் இந்தாண்டு ‘ஒயிட் கிறிஸ்துமஸ்’ கொண்டாடப்படுகிறது. இருந்தும் இதுவரை பனிப்பொழிவால் 4 பேர் பலியான நிலையில் 200 சாலைகள் மூடப்பட்டுள்ளன. இமாச்சல் பிரதேசத்தின் பிரபலமான நகரங்களான சிம்லா, மணாலி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. சிம்லா, மணாலி நகரங்கள் பனிப் போர்வையால் போர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக சிம்லாவில் மழையும், பனிப்பொழிவும் இருப்பதால் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது. இதுகுறித்து சிம்லா ஓட்டல் மற்றும் சுற்றுலா பங்குதாரர்கள் சங்கத் தலைவர் எம்.கே.சேத் கூறுகையில், ‘சிம்லாவில் 70 சதவீத ஓட்டல்கள் புக்கிங் ஆகிவிட்டது.

பனிப்பொழிவு அறை முன்பதிவு 30 சதவீதம் அளவிற்கு பூர்த்தியாகிவிட்டது. இமாச்சலப் பிரதேசத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாடுவதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். நகரங்கள் முழுவதும் பனிப்பொழிவு நிரம்பி இருப்பதால், இந்தாண்டு ‘ஒயிட் கிறிஸ்துமஸ்’ ஆக அமைந்துவிட்டது. பனிப்பொழிவு காரணமாக சிம்லா, மணாலியில் மட்டும் வெவ்வேறு சம்பவங்களில் 4 பேர் பலியாகினர். பனிப்பொழிவால் 200க்கும் மேற்பட்ட சாலைகள் மூடப்பட்டுள்ளன. அதேபோல் ஜம்மு-காஷ்மீரின் சில பகுதிகளில் பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. வெப்பநிலை அதன் உறைநிலைக்கு கீழே சென்றுவிட்டது. கிறிஸ்துமஸ் விடுமுறையை கழிப்பதற்காக வரும் சுற்றுலாப் பயணிகள் பனிப்பொழிவை கண்டு உற்சாகமடைந்துள்ளனர்’ என்று கூறினார்.

The post சிம்லா, மணாலி, காஷ்மீரில் பனிப்பொழிவு; இமாச்சலில் ‘ஒயிட் கிறிஸ்துமஸ்’ கொண்டாட்டம்: 4 பேர் பலி; 200 சாலைகள் மூடல் appeared first on Dinakaran.

Related Stories: