வீராணம் ஏரி நிரம்பியது: விவசாயிகள் மகிழ்ச்சி

சேத்தியாத்தோப்பு: கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி துவங்கி பூதங்குடி பகுதி வரை பரந்து விரிந்துள்ளது. இந்த ஏரியின் மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் சென்னை மக்களின் குடிநீர் தாகத்தையும் தீர்த்து வருகிறது. இந்நிலையில் கடந்த 13ம் தேதி பெய்த கனமழை காரணமாக வீராணம் ஏரியின் பாதுகாப்பு கருதி உபரி நீர் வெளியேற்றப்பட்டது.

இந்நிலையில் தற்போது கொள்ளிடம் வடவாற்றில் இருந்தும், மழை நீரும் சேமிக்கப்பட்டு வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டியது. நேற்றைய நிலவரப்படி ஏரியின் முழு கொள்ளளவான 47.50 அடியை எட்டி கடல் போல் காட்சியளிக்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post வீராணம் ஏரி நிரம்பியது: விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: