திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா, கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமரிசையாக நடந்தது. விழாவின் நிறைவாக, கடந்த 13ம் தேதி மகாதீப பெருவிழா நடந்தது. அப்போது, 2,668 அடி உயர மலைமீது மகாதீபம் ஏற்றப்பட்டது. நேற்று முன்தினம் இரவு வரை தொடர்ந்து 11 நாட்கள் மலை மீது மகாதீபம் பக்தர்களுக்கு காட்சியளித்தது. இதற்கு 4500 கிலோ நெய் மற்றும் 1500 மீட்டர் திரி பயன்படுத்தப்பட்டது.
இதை தொடர்ந்து நேற்று காலை மலையில் இருந்து சுமார் 200 கிலோ எடையுள்ள, செப்பினாலானா சுமார் ஐந்தரை அடி உயரம் கொண்ட தீப கொப்பைரையை ஊழியர்கள் தொளில் சுமந்தபடி மலையில் இருந்து கோயிலுக்கு கொண்டுவந்தனர். நேற்று காலை 7 மணிக்கு மலை உச்சியில் இருந்து புறப்பட்ட தீப கொப்பரை, பகல் 2 மணியளவில் கோயிலை அடைந்தது.
அங்குள்ள 5ம் பிரகாரம் ஆயிரங்கால் மண்டபத்தில் வைக்கப்பட்ட மகா தீப கொப்பரைக்கு, இரவு 7 மணியளவில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பக்தர்கள் தரிசனத்துக்காக வைக்கப்பட்டது. அப்போது, ஏராளமான பக்தர்கள் தீப கொப்பரையை தரிசனம் செய்தனர். அடுத்த மாதம் 13ம் தேதி நடைெபறும் ஆருத்ரா தரிசனத்தன்று, தீபச்சுடர் பிரசாதம் (தீப மை) நடராஜருக்கு அணிவிக்கப்படும். அதன்பிறகு, பக்தர்களுக்கு தீபச்சுடர் பிரசாதம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
The post திருவண்ணாமலை மலை உச்சியில் 11 நாட்களாக காட்சியளித்த மகாதீபம் நிறைவடைந்தது: தீப ெகாப்பரை கோயிலுக்கு கொண்டுவரப்பட்டது appeared first on Dinakaran.