ரூ.2 லட்சம் மோசடி ஆயுதப்படை காவலர் மீது பெண் புகார்

 

திருப்பூர், டிச.25: பெண்ணிடம் ரூ.2 லட்சம் மோசடி செய்த ஆயுதப்படை காவலர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் மாநகர ஆயுதப்படையில் போலீசாக பணியாற்றுபவர் மணி (25). இவர், திருப்பூர் காலேஜ் ரோடு பகுதியை சேர்ந்த ஜெய அமலாவிடம் கடந்த 2021ம் ஆண்டு கடனாக ரூ.2 லட்சம் பெற்றுள்ளார்.

தொடர்ந்து அந்த பணத்தை திரும்பி கொடுக்காமல் காலம் தாமதம் செய்துள்ளார். அந்த பெண்ணும் மணியிடம் பணம் கேட்ட போது மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த பெண் திருப்பூர் வடக்கு குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில், போலீசார் ஆயுதப்படை காவலர் மணி மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ரூ.2 லட்சம் மோசடி ஆயுதப்படை காவலர் மீது பெண் புகார் appeared first on Dinakaran.

Related Stories: