×

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக மக்களவையில் கோஷமிட்ட ஓவைசிக்கு கோர்ட் சம்மன்

பரேலி: பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக மக்களவையில் கோஷமிட்ட ஓவைசி ஜன.7ல் ஆஜராகும்படி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. ஐதராபாத் தொகுதி எம்பியாக இருப்பவர் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் தலைவர் ஓவைசி. இவர் தேர்தல் முடிந்ததும் ஜூன் 25 அன்று எம்பியாக மக்களவையில் பதவி ஏற்றார்.

அப்போது பாலஸ்தீனத்தை புகழ்ந்து கோஷம் எழுப்பினார். இதுதொடர்பாக உபி மாநிலம் பரேலி பகுதியை சேர்ந்த வீரேந்திரகுப்தா என்பவர் உள்ளூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த பரேலி மாவட்ட நீதிபதி சுதிர் மனுவை ஏற்றுக்கொண்டு, ஜனவரி 7ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு ஒவைசிக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டார்.

The post பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக மக்களவையில் கோஷமிட்ட ஓவைசிக்கு கோர்ட் சம்மன் appeared first on Dinakaran.

Tags : Court Summon for ,Owaisi ,Palestine ,Lok Sabha ,Bareilly ,Samman ,All India Majlis-e-Ittehadul ,Hyderabad ,People's Assembly ,Court Summon ,
× RELATED காசா மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல்: 20 பேர் பலி