புதுச்சேரியில் 6 ஆண்டுகளுக்கு பின் அரசு பேருந்து கட்டணம் உயர்வு இன்று அமலுக்கு வந்தது!!

புதுச்சேரி: புதுச்சேரியில் அரசு பேருந்துகளில் உயர்த்தப்பட்ட கட்டணம் இன்று அமலுக்கு வந்தது.புதுச்சேரியில் பேருந்து கட்டணம் கடந்த 2018ம் ஆண்டு உயர்த்தப்பட்டது. இதையடுத்து, புதுச்சேரியில் 6 ஆண்டுகளுக்கு பின் அரசுப் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.இதற்கான அறிவிப்பை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் உத்தரவின்படி போக்குவரத்து துறை கூடுதல் செயலர் சிவக்குமார் அண்மையில் வெளியிட்டார். அதன்படி, ஏ.சி., வசதி இல்லாத டவுன் பஸ்களுக்கு குறைந்தபட்ச கட்டணம் 5-ல் இருந்து 7 ரூபாய் ஆகிறது., அதிகப்பட்ச கட்டணம் 13-ல் இருந்து 17 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது குறைந்த பட்சம் 2 ரூபாய், அதிகபட்சம் 4 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

ஏ.சி., டவுன் பஸ் குறைந்தபட்ச கட்டணம் 10-ல் இருந்து 13 ஆகவும், அதிகபட்ச கட்டணம் 26-ல் இருந்து 34 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது குறைந்தபட்ச கட்டணம் 3-ம், அதிகப்பட்ச கட்டணம் 8 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.டீலக்ஸ் நான் ஏ.சி., பஸ்களுக்கு, ஏ.சி., டவுன் பஸ்களுக்கான கட்டணமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் டீலக்ஸ் ஏ.சி., பஸ்களுக்கு குறைந்தபட்ச கட்டணம் 12-ல் இருந்து 16 ஆகவும், அதிகபட்ச கட்டணம் 36-ல் இருந்த 47 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஏ.சி.. அல்லாத எக்ஸ்பிரஸ் பஸ்கள் புதுச்சேரி எல்லைக்குள் கி.மீ.,க்கு 0.75 பைசா என்பது 0.98 பைசாவாக உயர்த்தப்பட்டுள்ளது. 25 கி.மீ., வரை 20 என, இருந்த குறைந்தபட்ச கட்டணம் 25 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.ஏ.சி., எக்ஸ்பிரஸ் பஸ்கள் புதுச்சேரி எல்லைக்குள் கி.மீ., 1.30 என்பது தற்போது ரூ.1.69 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முதல் 25 கி.மீ., 50 ரூபாய் வசூலிக்கலாம்.புதுச்சேரி நகர பகுதிக்குள் ஏ.சி., வால்வோ பஸ் கி.மீ.,க்கு 1.70 என்பது தற்போது 2.21 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, முதல் 30 கி.மீ.,க்கு 54 ஆக இருந்த கட்டணம் தற்போது 70 ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த கட்டண உயர்வு இன்று முதல் புதுச்சேரியில் அமலுக்கு வந்துள்ளது.அதன்படி, புதுச்சேரியில் இருந்து காரைக்கால் செல்லும் பேருந்துகளுக்கு கட்டணம் ரூ.10 அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் இருந்து சென்னை செல்லும் பேருந்துகளுக்கு கட்டணம் ரூ.5 உயர்ந்துள்ளது.

The post புதுச்சேரியில் 6 ஆண்டுகளுக்கு பின் அரசு பேருந்து கட்டணம் உயர்வு இன்று அமலுக்கு வந்தது!! appeared first on Dinakaran.

Related Stories: