சாலை விரிவாக்க பணிக்காக நிலத்தை கையகப்படுத்த வந்த அதிகாரிகளுடன் மக்கள் வாக்குவாதம்

செங்கல்பட்டு: சாலை விரிவாக்க பணிக்காக நிலத்தை கையகப்படுத்த வந்த அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் பொதுமக்கள் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. செங்கல்பட்டில் இருந்து காஞ்சிபுரம் வரை செல்லும் சாலையை அகலப்படுத்தி இருவழிப்பாதையாக சாலை விரிவாக்கப்பணி கடந்த 3 ஆண்டுகளாக சாலை விரிவாக்கப்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில், வில்லியம்பாக்கம், பாலூர் உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் உள்ள பெரும்பாலான இடங்களை கையகப்படுத்தி சாலைப்பணி 90சதவீதம் முடிவடைந்துவிட்டது. இதில் குறிப்பாக செங்கல்பட்டு அடுத்த திம்மாவரம் முதல் ஆத்தூர் வரை சாலை விரிவாக்க பணிக்கு இடையூராக உள்ள வீடுகளை அகற்றுவதற்கான அறிவிப்பினை எழுத்துப் பூர்வமாகவும் நேரடியாகவும் துறை சார்ந்த அதிகாரிகள் தரப்பில் தகவல் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்றையதினம் திம்மாவரத்தில் இருந்து ஆத்தூர் வரை சாலையோரம் உள்ள வீடுகளை அகற்றுவதற்காக நெடுஞ்சாலைத் துறை உதவி இயக்குநர் தேன்மொழி தலைமையில் அதிகாரிகள் அந்த குறிப்பிட்ட இடத்திற்கு சென்று சாலையோர வீடுகளை அகற்ற முயற்சி செய்தனர். அப்போது, அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்கள் எந்தவித முன்னறிவிப்பின்றி எங்களது வீடுகளை அகற்றுகிறீர்கள்.

எங்களுக்கு கிருஸ்துமஸ் மற்றும் பொங்கல் முடியும் வரை கால அவகாசம் வேண்டும் என அதிகாரிகளோடு கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தகுதி அடிப்படையில் அகற்றப்படும் வீடுகளுக்கு பதிலாக பட்டாநிலம், ஒருசிலருக்கு இரண்டு லட்சம் ரூபாய் முதல் 3லட்சம் ரூபாய் வரை பண பட்டுவாடா முடிந்து நேற்றுவரை 23.12.2024 கால அவகாசம் கொடுக்கப்பட்டது. அரசு தரப்பில் கொடுத்த காலக்கெடு முடிந்தபடியால் சாலையோர வீடுகளை அகற்ற வந்ததுள்ளோம். இனியும் கால அவகாசம் கொடுக்க இயலாது.

அதனால், கிருஸ்துமஸ் பண்டிகை முடிந்த வருகிற வியாழக்கிழமை நீங்களாகவே வீட்டை காலிபண்ணி தரவேண்டும் என அதிகாரிகள் தரப்பில் கறாராக கூறிவிட்டு சென்றனர்.

The post சாலை விரிவாக்க பணிக்காக நிலத்தை கையகப்படுத்த வந்த அதிகாரிகளுடன் மக்கள் வாக்குவாதம் appeared first on Dinakaran.

Related Stories: