நெல்லை சம்பவம் எதிரொலி ஆயுதம் ஏந்திய போலீசார் நீதிமன்றங்களில் பாதுகாப்பு

விருதுநகர், டிச.24: நெல்லை சம்பவம் எதிரொலியாக விருதுநகர் மாவட்டத்தில் 7 நீதிமன்ற வளாகங்களில் ஆயுதம் ஏந்திய 87 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் அருகில் இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் எதிரொலியாக தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க டிஜிபி சங்கர் ஜிவால் நேற்று முன்தினம் உத்தரவிட்டிருந்தார்.

அதை தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து நீதிமன்றங்களுக்கும் ஆயுதம் ஏந்தி போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள நீதிமன்றங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில் 14 பேர் அடங்கிய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

அதே போல் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் 28 போலீசார், அருப்புக்கோட்டை 12 போலீசார், திருச்சுழி 5 போலீசார், சாத்தூர் 6 போலீசார், சிவகாசி 13 போலீசார், ராஜபாளையம் 9 போலீசார் என 87 போலீசார் ஆயுதங்களுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அனைத்து நீதிமன்ற வேலை நாட்களிலும் ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

The post நெல்லை சம்பவம் எதிரொலி ஆயுதம் ஏந்திய போலீசார் நீதிமன்றங்களில் பாதுகாப்பு appeared first on Dinakaran.

Related Stories: