பாஞ்சாலங்குறிச்சியில் மாற்றுக்கட்சியினர் தேமுதிகவில் ஐக்கியம்

ஓட்டப்பிடாரம், டிச. 24: பாஞ்சாலங்குறிச்சியில் மாற்றுக்கட்சியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர், அக்கட்சியில் இருந்து விலகி தேமுதிகவில் இணைந்தனர். தேமுதிக தூத்துக்குடி மாவட்ட செயலாளர் தயாளலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் முன்னிலையில் பாஞ்சாலங்குறிச்சி பகுதியை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி தேமுதிகவில் இணைந்தனர். இந்நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்ட பொருளாளர் விஜயன், மாவட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன்,நாராயணமூர்த்தி,மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜபொம்மு, ஓட்டப்பிடாரம் ஒன்றிய பொருளாளர் திருமணி முருகன், துணை செயலாளர் முத்துவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post பாஞ்சாலங்குறிச்சியில் மாற்றுக்கட்சியினர் தேமுதிகவில் ஐக்கியம் appeared first on Dinakaran.

Related Stories: