சிறுத்தையை கண்காணிக்க கூடுதல் டிராப் கேமரா வன அதிகாரி தகவல்

கே.வி.குப்பம், டிச.24: கே.வி.குப்பம் அருகே சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க கூடுதல் டிராப் கேமராக்கள் வரவழைக்கப்பட உள்ளதாக வன அதிகாரி தெரிவித்துள்ளார். கே.வி.குப்பம் அடுத்த துருவம் கிராமத்தில் கடந்த 18ம் தேதி சிவலிங்கம் மகள் அஞ்சலி(22) என்பவர் சிறுத்தை தாக்கியதில் பலியானார். தொடர்ந்து வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க சுழற்சி முறையில் தீவிரம் காட்டி வருகின்றனர். டிரோன் கேமரா மற்றும் டிராப் கேமரா மூலம் சிறுத்தை நடமாட்டம் உள்ளதா? என கண்காணிப்பு செய்து வருகின்றனர். அதேபோல், சிறுத்தையை பிடிக்க குலைக்கொள்ளை கிராமத்தில் உள்ள அடர்ந்த மூங்கில் காட்டிற்குள் கூண்டு வைத்துள்ளனர். ஆனால் இதுவரை சிறுத்தை சிக்கவில்லை.

இதுதொடர்பாக வனச்சரகர் வினோபாவா கூறுகையில், 4 நாட்களுக்கும் மேலாக டிராப் கேமரா மற்றும் டிரோன் கேமரா மூலம் சிறுத்தை நடமாட்டம் உள்ளதா என வனப்பகுதி முழுவதும் தேடி வருகிறோம். 10க்கும் மேற்பட்ட வனத்துறையினர் சுழற்சி முறையில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், ஏற்கனவே 3 டிராப் கேமரா உள்ளே நிலையில், கூடுதலாக 4 டிராப் கேமராக்களை கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வன கோட்டத்தில் கேட்டுள்ளோம். ஓரிரு நாட்களில் கிடைத்தவுடன் பொருத்தி விடுவோம். மேலும், சிறுத்தை தாக்கி இறந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு அரசு வழங்கும் ₹10 லட்சம் இழப்பீடு தொகை வனத்துறை மூலம் விரைவில் பெற்று தரப்படும் என்றார்.

The post சிறுத்தையை கண்காணிக்க கூடுதல் டிராப் கேமரா வன அதிகாரி தகவல் appeared first on Dinakaran.

Related Stories: