இதுகுறித்து, மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, மீஞ்சூர் அடுத்த நாலூர் ஜெயராமபுரத்தைச் சேர்ந்த கோபி என்பவரின் மகன் தினேஷ்(28), நாலூர் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் அருள் என்பவரின் மகன் அஜித்(21), மேலும், இவரது நண்பர்கள் காஞ்சிபுரம் உத்திரமேரூர் பகுதியைச் சேர்ந்த கேசவன் என்பவரின் மகன் மணிகண்டன்(35), வில்லிவாக்கத்தை சேர்ந்த சுகுமார் என்பவரின் மகன் ஜோஸ்வா(19) ஆகிய 4 பேர்களை மீஞ்சூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுமணி தலைமையில் போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து, அவர்களிடம் விசாரணை நடத்தியதில், தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஜோசப்புடன், நண்பர்களான இவர்கள் 4 பேருக்கும் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக வீடு புகுந்து ஜோசப்பை அரிவாளால் வெட்டியதை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
இதனையடுத்து, போலீசார் 4 பேர்களையும் பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இதில், தினேஷ் மற்றும் அஜித் ஆகிய இருவர் மீதும் மீஞ்சூர், பொன்னேரி, ராயபுரம், காட்டூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு குற்றவழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
The post முன்விரோதத்தால் வீடு புகுந்து தனியார் நிறுவன ஊழியரை அரிவாளால் வெட்டிய வாலிபர்கள் 4 பேர் கைது appeared first on Dinakaran.