கிறிஸ்துவின் போதனைகள் அன்பு, நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தைப் போற்றுகின்றன. இந்த உணர்வை வலுப்படுத்த அனைவரும் பணியாற்றுவது முக்கியம். வன்முறையை பரப்பி, சமூகத்தை சீர்குலைக்கும் முயற்சிகள் நடக்கும்போது மனது வலிக்கிறது. போரினால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானில் இருந்து அருட்தந்தை அலெக்சிஸ் பிரேம் குமாரை பத்திரமாக அழைத்து வந்தது எனக்கு மிகவும் திருப்திகரமான தருணம். அவர் எட்டு மாதங்கள் அங்கேயே சிக்கி, பிணைக் கைதியாக இருந்தார்.
எங்களைப் பொறுத்தவரை, இந்த பணிகள் அனைத்தும் வெறும் தூதரகப் பணிகள் அல்ல. நமது குடும்ப உறுப்பினர்களை மீண்டும் அழைத்து வருவதற்கான உணர்ச்சிபூர்வமான அர்ப்பணிப்பு. அவர்கள் எங்கிருந்தாலும், எந்த நெருக்கடியை எதிர்கொண்டாலும், இன்றைய இந்தியா தனது குடிமக்களைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்வதை தனது கடமையாகப் பார்க்கிறது.
கொரோனா காலத்தில் ஏழை நாடுகளுக்கு உதவ இந்தியா தனது திறன்களைத் தாண்டி 150 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு மருந்துகளை வழங்கியது. விக்சித் பாரத் கனவு நிச்சயம் நிறைவேறும் என்ற நம்பிக்கையை எங்கள் இளைஞர்கள் எங்களுக்கு அளித்துள்ளனர். கத்தோலிக்க திருச்சபையின் கர்தினலாக ஜார்ஜ் கூவக்காட்டை போப் பிரான்சிஸ் நியமனம் செய்திருப்பது பெருமைக்குரிய தருணம். இவ்வாறு மோடி பேசினார்.
The post கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம் கத்தோலிக்க கிறிஸ்தவ தலைமை அலுவலகம் சென்றார் மோடி: ஆயர்கள் மாநாட்டிலும் பங்கேற்றார் appeared first on Dinakaran.