புதுடெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் போது, கடந்த 19ம் தேதி, நாடாளுமன்ற நுழைவாயில் முன்பாக போராட்டம் நடத்திய பாஜ மற்றும் காங்கிரஸ் எம்பிக்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில், பாஜவை சேர்ந்த எம்பிக்களான ஒடிசாவை சேர்ந்த பிரதாப் சாரங்கி (69), உபியை சேர்ந்த முகேஷ் ராஜ்புத் ஆகியோருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதில் பிரதாப் சாரங்கி தன்னை மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தான் படியில் இருந்து தள்ளிவிட்டதாக குற்றம்சாட்டினார். ஐசியூவில் சிகிச்சை பெற்ற இருவரும் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட னர்.
The post நாடாளுமன்றத்தில் காயமடைந்த பாஜ எம்பிக்கள் டிஸ்சார்ஜ் appeared first on Dinakaran.