450 டன் கழிவுகள் 30 லாரிகளில் அகற்றம்

நெல்லை: நெல்லை மாவட்டம், சுத்தமல்லி, கொண்டாநகரம், நடுக்கல்லூர், கோடகநல்லூர் மேய்ச்சல் புறம்போக்கு நிலம், முன்னீர்பள்ளம், சீதற்பநல்லூர் உள்ளிட்ட இடங்களில் கேரள மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டிருந்தன. பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவின்படி கேரள, தமிழக அதிகாரிகள் முன்னிலையில் அவற்றை அகற்றி கேரளாவுக்கு எடுத்துச் செல்லும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. 18 டாரஸ் லாரிகளில் ஏற்றி கேரளா கொண்டு சென்றனர். இதில் ஒரு லாரி சேற்றில் சிக்கியது.

நேற்று 2வது நாளாக குப்பைகளை அகற்றும் பணி தொடங்கியது. இரு நாட்களிலும் சேர்த்து 30 டாரஸ் லாரிகள் மற்றும் 13 பொக்லைக் இயந்திரங்கள் குப்பைகள் அகற்றும் பணிக்கு பயன்படுத்தப்பட்டன. நேற்றுடன் கழிவுகள் முழுமையாக அகற்றப்பட்டன. அவை மொத்தம் 450 டன் என கணக்கிடப்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதி முழுவதையும் தூய்மைப்படுத்தும் பணியில் 13 தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர். தெளிப்பான்கள் உதவியுடன் ஹைபோ குளோரைடு திரவம் தெளித்து, பிளீச்சிங் பவுடர் தூவினர். இதனையடுத்து கிருமிநாசினி அடிக்கப்பட்டது.

The post 450 டன் கழிவுகள் 30 லாரிகளில் அகற்றம் appeared first on Dinakaran.

Related Stories: