×

வணிகர் சங்க ஆலோசனை கூட்டம்

திருவொற்றியூர்: தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆலோசனைக் கூட்டம் மாதவரம், ஜிஎன்டி சாலையில் நேற்று நடந்தது. மாநில தலைவர் கொளத்தூர் ரவி தலைமை வகித்தார்.

கூட்டத்தில், வணிகர்களின் மேம்பாடு மற்றும் சங்கத்தின் பல்வேறு பணிகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. தொடர்ந்து தமிழ்நாட்டில் வணிக வாடகை மீது விதிக்கப்படும் ஜிஎஸ்டியை ஒன்றிய அரசு ரத்து செய்யவேண்டும் என்று சங்கம் போராடி வரும் நிலையில், முதல்வரின் ஆலோசனைப்படி அமைச்சர்கள் பங்கேற்ற 55வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு, வணிக கடை வாடகை மீது ஜிஎஸ்டி ரத்து செய்ய கோரிக்கை விடுத்துள்ளார்.

இவ்வாறு வணிகர்களின் கோரிக்கையை முன்னெடுத்த அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

The post வணிகர் சங்க ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Associations ,Tamil ,Nadu ,GNT Road, Matavaram ,Kolathur Ravi ,Dinakaran ,
× RELATED 18% ஜிஎஸ்டி வரியை திரும்ப பெற...