48வது வார்டு கார்த்திக் காமேஷ்: ஒவ்வொரு ஆண்டும் பருத்திப்பட்டு, அன்பு நகர், அரவிந்த் நகர் பகுதியில், வெள்ளம் வெளியேற வழியின்றி குடியிருப்பை சுற்றி, முட்டி அளவுக்கு வெள்ளம் தேங்கி நிற்கிறது. வெள்ளம் வெளியேற மழைநீர் வடிகால் அமைத்து தர வேண்டும். ஆவடி அறிவுசார் மையம் அருகே உள்ள சாலையோர பூங்காவை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
8வது வார்டு சக்திவேல்: பொத்தூர், ஆரிக்கம்பேடு, செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல பொதுமக்கள் திருமுல்லைவாயில், குளக்கரை சாலையை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இங்கு தொழிற்சாலைகள் அதிகம் இருப்பதால், கனரக வாகனம் பயன்பாடு அதிகரித்து வருகிறது. எனவே, குளக்கரை சாலையை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை வேண்டும் என்றார்.
42வது வார்டு ராஜேந்திரன்: ஆவடி மாநகராட்சியில், உதவி வருவாய் அலுவலர் பற்றாக்குறை உள்ளது. தற்போது பணிபுரிந்து வரும் இருவரும் முறைகேட்டில் ஈடுபடுகின்றனர். இதனால், மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது என்றார். இதற்கு பதில் அளித்த கமிஷனர் கந்தசாமி, உரிய ஆதாரங்களுடன் புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
7வது வார்டு ஜெயப்ரியா: திருமலைவாசன் நகரில், புதைவட கேபிள் பதிக்கும் பணிக்காக சாலை தோண்டப்பட்டது. மழையால், சாலை போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் காட்சியளிக்கிறது. எனவே, இந்த பிரதான சாலையை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். பின்னர் கூட்டத்தில் மொத்தம் 119 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
The post ஆவடி மாமன்ற கூட்டத்தில் 119 தீர்மானம் நிறைவேற்றம் appeared first on Dinakaran.