பிறகு ரேலா மருத்துவமனையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் முகமது ரேலா பேசுகையில், ‘‘ஒன்றுபட்ட சமூகம் என்ற உணர்வை வளர்ப்பதில் எங்கள் மருத்துவமனை உறுதி கொண்டிருக்கிறது. எனவே, பண்டிகைகள், திருவிழாக்கள் வரும்போது அனைவரையும் ஒருங்கிணைத்து மகிழ்ச்சிகரமன தருணங்களாக நாங்கள் அவற்றை மாற்றுகிறோம். இந்த இளம் சாண்டாக்கள் வெளிப்படுத்தும் உற்சாகமும், நம்பிக்கையும் அவர்கள் எதிர்கொள்ளும் அனைவரையும் மகிழ்ச்சியானவர்களாக மாற்றி, புன்னகையை வரவழைப்பதை காண்பது மனநிறைவளிக்கிறது.
விழாக் கால கொண்டாட்டத்தில் எங்கள் சமூகத்தினரை ஈடுபடச் செய்வது மருத்துவ சிகிச்சையையும் கடந்த ஒரு நம்பிக்கையை தரும்’’ என்றார். தி ஆல்ட் பள்ளியின் நிறுவனர் தீபா ஆத்ரேயா பேசுகையில், ‘தி ஆல்ட் பள்ளியில், கிறிஸ்துமஸ் மகிழ்ச்சியை மக்கள் மத்தியில் பரப்புவதற்காக எங்கள் குழந்தைகளை ஒவ்வொரு ஆண்டும் சாண்ட்டா கிளாஸ் தாத்தா தோற்றத்தை அணியுமாறு செய்து, நகரின் பல இடங்களுக்கும் நேரில் சென்று வாழ்த்தி மகிழ்ச்சியை பரப்பி வருகிறோம்’’ என்றார்.
The post ரேலா மருத்துவமனையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் appeared first on Dinakaran.