டூவீலரில் கடத்திய செம்மரக்கட்டை பறிமுதல்


திருச்சி: மண்ணச்சநல்லூர் அருகே டூவீலரில் கடத்தி வந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருவெள்ளறையில் மண்ணச்சநல்லூர் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருவெள்ளறை-சா.அய்யம்பாளையம் சாலையில் இரு சக்கர வாகனத்தில் மரங்களை ஏற்றிவந்த இரண்டு பேரை போலீசார் தடுத்தனர். ஆனால் அவர்கள் டூவீலரை அங்கேயே நிறுத்திவிட்டு வயல்வெளிக்குள் குதித்து தப்பி ஓடிவிட்டனர். டூவீலரை போலீசார் பார்வையிட்ட போது அவர்கள் செம்மரம் கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து டூவீலர் மற்றும் ரூ.3லட்சம் மதிப்புள்ள செம்மரத்தை போலீசார் கைப்பற்றி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். தகவலறிந்து வந்த வனத்துறை போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் வழக்கு பதிவு செய்து செம்மர கடத்தி வந்த 2 பேர் யார்? எந்த ஊரை சேர்ந்வதர்கள், செம்மரக்கட்டை வனப்பகுதியில் இருந்து வெட்டி கடத்தி வரப்பட்டதா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post டூவீலரில் கடத்திய செம்மரக்கட்டை பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: